ADDED : ஆக 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம், மேம்பட்ட சர்க்கரை மற்றும் சாக்லேட் கலைநயம் குறித்து வகுப்பு மற்றும் கண்காட்சியை, கடந்த 22ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பிரபல சமையல் கலைஞர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தினர். அவர்கள், ஜி.ஆர்.டி., ஹோட்டல்ஸ் சீத்தாராம் பிரசாத், சர்வதேச சமையல் ஒலிம்பியன் திமுத்து குமாரசிங்கே, முனைவர் பொன்னுசாமி, எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேலாண்மை நிறுவன இயக்குநர் ஆண்டனி அசோக் குமார், டீன்ஸ் கேக் அகாடமி இயக்குநர் நிலுபா உள்ளிட்டோர்.
