ADDED : நவ 15, 2023 12:32 AM
அ நிறம் | அளவு
சென்னை, கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சென்னை மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கு, அஞ்சல் வழி அல்லது பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர், www.tncuicm.com என்ற இணையதளத்தில், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
