/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோஸ் கிலோ ரூ.8 - 10 வியாபாரிகள் கடும் விரக்தி
/
கோஸ் கிலோ ரூ.8 - 10 வியாபாரிகள் கடும் விரக்தி
ADDED : பிப் 19, 2025 12:19 AM

சென்னை: தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு, கோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், 1 கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கோஸ் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்தது. இதை நம்பி, விவசாயிகள் அதிகளவில் கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.
அவற்றின் அறுவடை தற்போது துவங்கியுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ கோஸ் மொத்த விலையில் 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி செலவு மட்டுமின்றி வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி கூட கட்டுப்படியாகாததால், விவசாயிகள், வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.