/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ., ஆபீசில் காப்பர் திருட்டு
/
எம்.எல்.ஏ., ஆபீசில் காப்பர் திருட்டு
ADDED : செப் 26, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ராயபுரம், அண்ணா பூங்கா நீரேற்று நிலைய வளாகத்தில் ராயபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் சரத்குமார், 27, நேற்று முன்தினம் அலுவலகத்தை பூட்டி சென்றுள்ளார்.
நேற்று அலுவலகத்தை திறந்து, 'ஏசி'யை ஆன் செய்த போது இயங்கவில்லை. உடனே பின்புறம் சென்று பார்த்தபோது, 'ஏசி'க்கான காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

