/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் காப்பர் ஒயர் திருட்டு
/
குப்பை கிடங்கில் காப்பர் ஒயர் திருட்டு
ADDED : ஜன 13, 2025 02:48 AM
கொடுங்கையூர்:கொடுங்கையூர் குப்பை கிடங்கில் செயல்படும், குளோபல் என்விரோன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாளர் ராமஜெயம், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆறு மாதத்திற்கு முன், சென்னை மாநகராட்சியிடம் பெறப்பட்ட டெண்டர் வாயிலாக, கொடுங்கையூர் குப்பை கிடங்கில், பயோமெட்ரிக் முறையில் குப்பையை பிரித்து எடுக்கும் வேலை, எங்கள் நிறுவனம் சார்பில் நடந்து வருகிறது.
நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு மஹிந்திரா பொலிரோ வாகனத்தின் கண்ணாடிகளை, நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சென்று விட்டனர்.
பயோமெட்ரிக் முறையில் குப்பையை பிரித்து எடுக்கும் இயந்திரத்தின் அருகில் நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.