/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோரமண்டல் விவகாரம் மாஜி எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
கோரமண்டல் விவகாரம் மாஜி எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : மார் 04, 2024 01:57 AM

எண்ணுார்:எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், அ.தி.மு.க., அமைப்பு செயலர் மனோ, மாவட்ட செயலர் மூர்த்தி, பகுதி செயலர் குப்பன், கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று, 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பேசுகையில், ''எண்ணுார் மக்களுக்கு, நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று தந்தது அ.தி.மு.க., மீண்டும், ஆட்சி அமைந்தால், நிரந்தர வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
''தற்போதைய அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கோரமண்டல் ஆலையை திறக்க, 30 கோடி ரூபாய் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தால், நிறுவனத்தை இழுத்து மூடுவோம்,'' என்றார்.

