/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாடண்டர் நகர் குடியிருப்பில் மாநகராட்சி துாய்மை பணி
/
தாடண்டர் நகர் குடியிருப்பில் மாநகராட்சி துாய்மை பணி
தாடண்டர் நகர் குடியிருப்பில் மாநகராட்சி துாய்மை பணி
தாடண்டர் நகர் குடியிருப்பில் மாநகராட்சி துாய்மை பணி
ADDED : ஜூலை 14, 2025 02:42 AM

சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை அரசு ஊழியர்கள் குடியிருப்பில் துாய்மை பணி மேற்கொள்ளாததால், சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சுப்பிரமணியன் தலையிட்டு, மெகா துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
அடையாறு மண்டலம், 169வது வார்டில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கவுன்சிலராக தேர்வானார்.
இதே வார்டு, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு, 70.73 ஏக்கர் பரப்பு உடையது.
இங்கு, 1,844 குடியிருப்புகள் உள்ளன. மேலும், 1,500 குடியிருப்புகள் வர உள்ளன. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள இந்த வளாகத்தில் பூங்கா, விளையாட்டு திடல், மருத்துவமனை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணி முறையாக மேற்கொள்ளாததால், சுகாதார சீர்கேடாக காணப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன், அரசு ஊழியர்கள் குடியிருப்பில் மெகா துாய்மை பணியை நேற்று துவக்கினார். 46 குப்பை தொட்டிகள், ஐந்து வாகனங்களை பயன்படுத்தி, 26 பணியாளர்கள், வளாகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், துணை மேயர் மகேஷ்குமார், இணை கமிஷனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.