/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை லாரிக்கு 24 மணி நேர அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனர் காவல்துறைக்கு கடிதம்
/
குப்பை லாரிக்கு 24 மணி நேர அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனர் காவல்துறைக்கு கடிதம்
குப்பை லாரிக்கு 24 மணி நேர அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனர் காவல்துறைக்கு கடிதம்
குப்பை லாரிக்கு 24 மணி நேர அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனர் காவல்துறைக்கு கடிதம்
ADDED : ஜூன் 29, 2025 10:34 PM
சென்னை:வாகனங்களுக்கு போலீசார் விதித்த தடையால் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே இருந்த நடைமுறைபோல், 24 மணி நேரமும் குப்பை லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கொளத்துாரில் தனியார் குடிநீர் லாரி மோதி, 10 வயது சிறுமி பலியானார். இதையடுத்து, பீக்ஹவர்ஸ் நேரத்தில், சென்னையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால், குடியிருப்புகள், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு லாரி குடிநீர் வினியோகம் தடைபட்டது.
குடிநீர் வாரிய அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, குடிநீர் லாரிகளுக்கு குறிப்பிட்ட நேரம் தளர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல், குப்பை லாரிகளுக்கும் தளர்வு கேட்டு, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் சேரும் குப்பையை தினமும் கிடங்குகளில் சேர்த்து துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருகிறோம்.
போலீசார் காலை 7:00 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, குப்பை லாரிகள் செல்ல தடைவிதிப்பதால், திடக்கிழவு மேலாண்மை பணி முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
துாய்மை பணியும் பாதித்து, தொட்டிகளில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டால், நோய் பரவும் சூழல் ஏற்படும்.
இதனால், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் ஊழியர்கள் துாய்மை பணி மேற்கொள்வதால், அந்நேரங்களில் வாகனங்கள் இயக்கம் அவசியம்.
இதனால், நேரக்கட்டுப்பாடு இல்லாமல், ஏற்கனவே உள்ள நடைமுறைபோல், 24 மணி நேரமும் குப்பை லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், துாய்மை பணி மேற்கொள்ளும், 'உர்பேசர் சுமித், சென்னை என்விரா சொலியூஷன்ஸ்' மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசி வருகின்றனர்.