/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கணினி பராமரிப்பு ரூ.3.60 கோடி செலவு
/
மாநகராட்சி கணினி பராமரிப்பு ரூ.3.60 கோடி செலவு
ADDED : டிச 27, 2024 08:46 PM
சென்னை:கணினிகள், மென்பொருட்கள் உள்ளிட்டவை பராமரிப்புக்காக ஆண்டுக்கு 3.60 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்து வரி செலுத்துதல், கட்டட வரைபடம் பெறுதல், அபராதம் தொகை வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கணினியமாக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி, மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகங்கள், மண்டல, வார்டு மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கணினிகள், வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட பராமரிப்புக்கு, மின்னணு ஒப்பந்தத்தை மாநகராட்சி கோர உள்ளது. இதற்கான ஆண்டு பராமரிப்பு செலவாக, 3.60 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.