/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு
/
மாநகராட்சி கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : நவ 26, 2025 03:03 AM
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடைபெறுவதால், சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், 'மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் வரும், 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு கால அவகாசம் குறைவாக உள்ளது. இப்பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதால், இம்மாதத்திற்கான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பரில் நடைபெறும்' என்றார்.

