/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3,500 தெருக்களில் ஜாதி பெயர் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை
/
3,500 தெருக்களில் ஜாதி பெயர் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை
3,500 தெருக்களில் ஜாதி பெயர் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை
3,500 தெருக்களில் ஜாதி பெயர் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை
ADDED : அக் 12, 2025 02:09 AM
சென்னை,:சென்னை மாநகராட்சியில், ஜாதி பெயரிலான, 3,500 தெருக்களின் பெயர்களை மாற்றம் செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில், 33,834 தெருக்கள் உள்ளன. இவற்றின் பெயர் பலகையை, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தில் மாற்றியமைக்கும் பணியை, 2022ல் மாநகராட்சி செய்தது.
அப்போது, 8.43 கோடி ரூபாய் செலவில் புதிய தெரு பலகைகள் வைக்கப்பட்டன. அதில், ஜாதி பெயரிலான தெருக்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு எழுதப்பட்டது.
குறிப்பாக, அடையாறு மண்டலம், 171வது வார்டில் அப்பாவோ கிராமணி 2வது தெரு என்ற பெயர், 'அப்பாவு (கி) தெரு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதேபோல், ஜாதிய பெயரிலான தெரு பலகைகளில், ஜாதி பெயர்களை மாநகராட்சி நீக்கியது. எனினும், அரசு ஆவணங்களில் ஜாதி பெயரிலயே அத்தெருக்களின் பெயர் இருந்து வருகிறது.
இந்நிலையில், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு சொத்துகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க, மறு பெயரிட, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இவற்றை நவ., 11ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில், 3,500க்கும் மேற்பட்ட தெருக்கள், சாலைகளில் ஜாதி பெயர்கள் உள்ளன. அவற்றை நீக்கி, மறு பெயரிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே கருத்து கேட்கப்படும். மக்களின் கருத்துக்கு ஏற்ப, ஜாதி பெயர்கள் மாற்றப்படும்' என்றனர்.