/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.30 கோடி தொழுவத்தில் மாடு கட்ட உரிமையாளர்கள் மறுப்பு விழிபிதுங்கும் மாநகராட்சி அதிகாரிகள்
/
ரூ.1.30 கோடி தொழுவத்தில் மாடு கட்ட உரிமையாளர்கள் மறுப்பு விழிபிதுங்கும் மாநகராட்சி அதிகாரிகள்
ரூ.1.30 கோடி தொழுவத்தில் மாடு கட்ட உரிமையாளர்கள் மறுப்பு விழிபிதுங்கும் மாநகராட்சி அதிகாரிகள்
ரூ.1.30 கோடி தொழுவத்தில் மாடு கட்ட உரிமையாளர்கள் மறுப்பு விழிபிதுங்கும் மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : ஜூன் 28, 2025 03:50 AM

ராயபுரம்,:சென்னையில், மாடுகளால் சாலை விபத்து, உயிர்பலி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாநகராட்சி அபராதம் விதித்தனர்.
இதனால் எந்த பயனும்ஏற்படவில்லை. அதேநேரம், கால்நடைகளின் உரிமையாளர்களால் மாநகராட்சி ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டு கொட்டகைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்தன.
முதற்கட்டமாக, ராயபுரம், பேசின்பாலம் சாலையில், 7,700 சதுர அடியில், 1.30 கோடி ரூபாய் செலவில், 250 மாடுகள் தங்கும் அளவிற்கு மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்த கொட்டகை மூலம், ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 10 ரூபாய் வாடகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், மாதம் 300 ரூபாய் மாட்டு உரிமையாளர்கள் கட்ட வேண்டி இருந்தது.
உரிமையாளர்கள் காலை, மாலை வேளைகளில் இங்கு வந்து பாலை கறந்து செல்லலாம். பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் மாடுகளுக்கு தீவனம் வழங்குவது, சாணியை அப்புறப்படுத்துவது, மாட்டை குளிக்க வைப்பது உள்ளிட்டவை, நவீன முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மாடு வளர்ப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, மாநகராட்சி அறிவுறுத்தியது.
ஒரு மாதத்திற்கு முன், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மாட்டு கொட்டகையை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஆனால், மாடுகளை கட்ட மாட்டின் உரிமையாளர்கள் முன்வரவில்லை. 'மாதந்தோறும் 300 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாத வகையில் தான், தங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது' என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், 'இலவசமாக கொடுத்தால் மட்டுமே, மாடுகளை கட்டுவோம். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்தனர்.
மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டுவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறி, உரிமையாளர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். விரைவில் மாடுகளை கட்ட வருவர். மேலும், கட்டண குறைப்பு குறித்தும் மாநகராட்சியில் தெரிவித்துள்ளோம்.
- மாநகராட்சி அதிகாரிகள்