/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெற்குன்றத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்

ADDED : டிச 26, 2024 12:18 AM

நெற்குன்றம், ஊராட்சியாக இருந்த நெற்குன்றம், சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்தில் இணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது.
ஆனால், இந்த வார்டில், சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான பணிகள், இன்னும் முழுமைபெறவில்லை.
மேலும், இந்த வார்டில், விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்ற குறை, அப்பகுதி மக்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதன்படி, நெற்குன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, பெருமாள் கோவில் தெருவில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில், வார்டின் முதல் பூங்கா அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.
ஒரு மாதத்திற்கு முன், பணிகள் அனைத்தும் முடிந்து, பூங்கா திறக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அதே வார்டில், மாதா கோவில் தெருவில், 36,000 சதுர அடி பரப்பளவில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, நடைபாதை, பேட்மின்டன் மைதானம், தியானப்பகுதி, கழிப்பறை என, அனைத்து வசதிகளுடன் உருவாக உள்ளது.