/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையால் பல்லாங்குழியான மாநகராட்சி சாலைகள்
/
மழையால் பல்லாங்குழியான மாநகராட்சி சாலைகள்
ADDED : நவ 28, 2024 12:22 AM

அனகாபுத்துார், நவ. 28-
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், அனகாபுத்துார், பம்மல் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. உட்புற சாலைகளில், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டவுடன் அச்சாலைகளை, ஒப்பந்ததாரர்கள் முறையாக மூடுவதில்லை.
சில நாட்களில், அச்சாலைகளில் மரண பள்ளங்கள் ஏற்பட்டு, நடந்து செல்வோர்கூட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோரின் நிலைமையோ மோசம்.
மற்றொரு புறம், லேசான மழை பெய்தால், இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன.
அந்த சேற்றிலேயே நடந்தும், வாகனங்களிலும் சென்று வருவோரும், சேற்றில் வழுக்கி விழும் சம்பவம் நடக்கிறது.
இந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையில், அனகாபுத்துாரில் உள்ள குருசாமி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, அண்ணா தெருக்களில் நடக்கவே முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இத்தெருக்களில் வசிப்போரின் நலனில் அக்கறை செலுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.