/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் மாநகராட்சி
/
ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் மாநகராட்சி
ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் மாநகராட்சி
ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் மாநகராட்சி
ADDED : அக் 18, 2024 12:12 AM

சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன.
சாலையில் தேங்கும் மழைநீர், வடிகாலில் விழும் வகையில், 15 மற்றும் 10 மீட்டர் இடைவெளியில், 1.5 அடி ஆழத்தில், 15,000க்கும் மேற்பட்ட சல்லடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, அதில் மண், கற்கள், கழிவுகள் நிறைந்திருக்கும். அவற்றை மழைக்கு முன் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் உள்ள சில வார்டுகளில், பல சல்லடைகள் சுத்தம் செய்யவில்லை.
நேற்று முன்தினம் பெய்த மழையில், சாலையில் தேங்கிய வெள்ளம், வடிகாலில் விழவில்லை. இங்குள்ள பல சல்லடைகளை துார்வாரி சீரமைக்காததால், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் வெள்ளம் தேங்கியது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில வார்டுகளில், சல்லடை முறையாக துார்வாரவில்லை என தெரிகிறது. மழைக்குமுன் துார் வார ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.