/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 மணி நேர மின் வெட்டால் பருத்திப்பட்டு வாசிகள் அவதி
/
5 மணி நேர மின் வெட்டால் பருத்திப்பட்டு வாசிகள் அவதி
5 மணி நேர மின் வெட்டால் பருத்திப்பட்டு வாசிகள் அவதி
5 மணி நேர மின் வெட்டால் பருத்திப்பட்டு வாசிகள் அவதி
ADDED : மே 13, 2025 12:25 AM
ஆவடி :ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஆவடி, பருத்திப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பருத்திப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், முதியோர், குழந்தைகள் உட்பட, அனைவரும் உஷ்ணத்தில் உறக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், பருத்திப்பட்டு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மின் பகிர்மான கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பருத்திப்பட்டு கேந்திரிய விஹார் குடியிருப்பில் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், குடியிருப்பில் உள்ள 572 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால், மதியம் 2:00 மணி முதல் இரவு 7:30 வரை மின் வெட்டு நீடித்தது. அதன்பின், மின் விநியோகம் சீரானது.
தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின் வெட்டால், குடியிருப்பில் உள்ள முதியோர், குழந்தைகள் உட்பட அனைவரும் கடும் அவதியடைந்தனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.