/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்காததால் ரூ.பல கோடிக்கு வடிகால்வாய் கட்டியும் பயனில்லை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் காட்டம்
/
விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்காததால் ரூ.பல கோடிக்கு வடிகால்வாய் கட்டியும் பயனில்லை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் காட்டம்
விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்காததால் ரூ.பல கோடிக்கு வடிகால்வாய் கட்டியும் பயனில்லை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் காட்டம்
விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்காததால் ரூ.பல கோடிக்கு வடிகால்வாய் கட்டியும் பயனில்லை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் காட்டம்
ADDED : ஜூலை 15, 2025 12:27 AM
கோடம்பாக்கம், 'விருகம்பாக்கம் கால்வாயை துார்வாராததால், பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் கட்டியும் பயனில்லை' என, மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.
கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது.
மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற் பொறியாளர் இனியன், செயற் பொறியாளர் பொறுப்பு ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
பாஜ., 134வது உமா ஆனந்தன்: என் வார்டு அலுவலகத்தில் போதிய இடவசதியில்லை. அதே வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத 'அம்மா' குடிநீர் மையம் மற்றும் 'அம்மா' உணவகத்தை மாற்றி அமைத்து, புது வார்டு அலுவலகம் கட்ட வேண்டும். பல கடைகள் முறையான மாநகராட்சி உரிமம் பெறாமல் செயப்பட்டு வருகிறது. கடந்த முறையும் பேசினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை.
தி.மு.க., 138வது வார்டு: என் வார்டு அலுவலக கட்டடமும், பாழடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டடத்தையும் இடித்து, புது கட்டடம் கட்ட வேண்டும். சில நாட்களாக குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னை வருகிறது. அதை கண்காணித்து சீர்செய்ய வேண்டும். மேலும், அழுத்தம் குறைவாக உள்ளதால், போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை.
தி.மு.க., 133வது வார்டு, ஏழுமலை: மண்டல கூட்டத்திற்கு மின் வாரியம், உணவு வழங்கல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் வருவதில்லை. அவர்களும் வந்தால்தான் மக்கள் குறைகளை தீர்க்க முடியும். தனியார் உணவகங்களில் இருந்து குப்பை கழிவுகளை எடுக்கும் தனியார் நிறுவனம், அந்த குப்பையை சட்டவிரோதமாக மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டி செல்கின்றனர்.
தி.மு.க., 127வது வார்டு, லோகு: என் வார்டில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பள்ளியில் அருகே உள்ள திறந்தவெளி நிலத்தில் உள்ள பூங்காவை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி வைத்துள்ளனர். அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருகம்பாக்கம் கால்வாய், சேறும் சகதியும் நிறைந்துள்ளது. அந்த கால்வாயை சுத்தம் செய்யாமல், பல கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால்வாய் கட்டியும் பயனில்லை.
கோயம்பேடு சந்தை மின் வாரிய அலுவலகத்தில் நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மின்தடை ஏற்பட்டால் அதை சீர் செய்ய ஆள் இல்லாத நிலை உள்ளது.
கோயம்பேடில் கட்டப்பட்டு வரும் தனியார் அடுக்குமாடியில் இருந்து, கூவம் கரையோரம் உள்ள சுடுகாட்டில் கழிவுநீர் விடப்படுகிறது. அதனால், இறுதி சடங்கிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் அரசை திட்டும் நிலை உள்ளது.
தி.மு.க., 128வது வார்டு, ரத்னா லோகேஸ்வரன்: விருகம்பாக்கம் பங்காரு தெருவில் 'அம்மா' குடிநீர் மையம் பயனற்ற நிலையில் உள்ளது. அதை அகற்ற வேண்டும். வார்டில் எம்.பி., நிதியில் பல்நோக்கு கட்டடம் கட்டியிருந்தோம். அதில் உள்ள ஆண்கள் உடற்பயிற்சி கூடம், பயிற்சியாளர் இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தி.மு.க., 130வது வார்டு, பாஸ்கர்: வடபழனி அழகிரி நகர், மூன்றாவது தெருவில் கவுன்சிலர் நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் கட்டவும், அதேபோல் பெயர் பலகை வைக்க 10 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்பணிகளுக்கு இன்னும் ஒப்பந்தம் கோரப்படவில்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.