/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொத்தை அபகரிக்க பொய் புகார் கவுன்சிலர் சதீஷ்குமார் மனு
/
சொத்தை அபகரிக்க பொய் புகார் கவுன்சிலர் சதீஷ்குமார் மனு
சொத்தை அபகரிக்க பொய் புகார் கவுன்சிலர் சதீஷ்குமார் மனு
சொத்தை அபகரிக்க பொய் புகார் கவுன்சிலர் சதீஷ்குமார் மனு
ADDED : பிப் 23, 2024 12:41 AM
சென்னை, சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - கே.பி.கந்தன். இவரது மகன் சதீஷ்குமார். இவர், சென்னை மாநகராட்சி, 182வது வார்டு கவுன்சிலர். சதீஷ்குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, அவரது மனைவி சுருதி பிரியதர்ஷினி சார்பில், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது தந்தை ஸ்ரீகாந்த் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் கவுன்சிலர் சதீஷ் குமார் நேற்று அளித்துள்ள புகார்:
எனக்கும், சென்னை அம்பத்துார் அடுத்த, பானு நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மகள் சுருதி பிரியதர்ஷினி என்பவருக்கும் 2018ல் திருமணம் நடந்தது.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 2021ல் பிரிந்து விட்டோம். விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், திருமணத்தின் போது, நான், என் தந்தை, தாய், சகோதரி ஆகியோர், மணமகளுக்கு 1,000 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 100 சவரன், விலை உயர்ந்த இரண்டு கார்கள் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பொய் புகார் அளித்துள்ளனர்.
விவாகரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், எங்கள் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளனர். என் மீதும், என் தந்தை மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும், எங்கள் சொத்தை அபகரிக்கும் உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் மீதும், பின்னணியில் இருப்போர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.