/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீரை அகற்றுவதில் புறக்கணிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்
/
மழைநீரை அகற்றுவதில் புறக்கணிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்
மழைநீரை அகற்றுவதில் புறக்கணிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்
மழைநீரை அகற்றுவதில் புறக்கணிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்
ADDED : டிச 03, 2024 12:57 AM
தாம்பரம், டிச.
'பெஞ்சல்' புயலால், சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களும் வெள்ளத்தில் தத்தளித்தன.
ஐந்தாவது மண்டலத்தில் அடங்கிய, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள 47, 65, 66, 69 மற்றும் 70 ஆகிய ஐந்து வார்டுகளும் பாதிக்கப்பட்டன.
65வது வார்டில் ரிக்கி கார்டன், அம்பேத்கர் நகர், விக்னேஷ் அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மற்ற மண்டலங்களில் வெள்ள தடுப்பு பணிகளில் கவனம் செலுத்திய மாநகராட்சி அதிகாரிகள், 5வது மண்டலத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களின் ஐந்து வார்டுகளை எட்டிக்கூட பார்க்கவில்லை என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், 3வது மண்டலத்தில், மழைநீர் தேங்கும் பகுதிகளில், வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த மண்டலத்தில், வள்ளல் யூசப் நகர், வாசுகி தெரு, திருமலை நகர் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. சாலை மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி, மக்கள் பாதிப்படைந்தனர்.
அப்படியிருந்தும், மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாகவும், தாமதமாக மோட்டார்களை பொருத்தியதாகவும், வெள்ள தடுப்பு பணிக்கு ஒப்பந்தம் எடுத்த யாரும் முறையாக பணி செய்யவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.