/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் வெளிவிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கவுன்சிலர்கள் கேள்விக்கு திணறிய அதிகாரிகள்
/
கழிவுநீர் வெளிவிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கவுன்சிலர்கள் கேள்விக்கு திணறிய அதிகாரிகள்
கழிவுநீர் வெளிவிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கவுன்சிலர்கள் கேள்விக்கு திணறிய அதிகாரிகள்
கழிவுநீர் வெளிவிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கவுன்சிலர்கள் கேள்விக்கு திணறிய அதிகாரிகள்
ADDED : பிப் 13, 2024 12:35 AM

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது.
மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் அஸ்வினி, தன் கைக்குழந்தையுடன் பங்கேற்றார்.
கவுன்சிலர்கள் பேசியதாவது;
கோவிந்தராஜ், அ.தி.மு.க., 193வது வார்டு: துரைப்பாக்கத்தில், நுழைவாயில் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின், மயானம் கட்ட வேண்டும். சாய் நகர் வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்.
விமலா கர்ணா, தி.மு.க., 194வது வார்டு: பெத்தல் நகரில், குடிநீர், சாலை வசதி முறையாக வழங்காததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஏகாம்பரம், தி.மு.க., 195வது வார்டு: ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற வேண்டும். எழில் நகரில் குழாய் உடைந்து குடிநீர் விணாவதால் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை.
அஸ்வினி கர்ணா, அ.தி.மு.க., 196வது வார்டு: கண்ணகிநகரில் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு கடைகள் கட்டி கொடுக்காததால் சாலையோரம் நடத்தி வருகின்றனர்.
மேனகா சங்கர், அ.தி.மு.க., 197வது வார்டு: பனையூரில் பணி முடிந்த கழிவுநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு விட வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சாலை சீரமைக்கப்படுகிறது. நடமாட்டம் உள்ள பகுதியில் சீரமைப்பதில்லை.
லியோ சுந்தரம், பா.ஜ., 198வது வார்டு: காரப்பாக்கத்தில், வார்டு எல்லை பலகை வைக்க வேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். கல்லுாரி மாணவியர் செல்லும், ரங்கநாதன் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்
சங்கர், தி.மு.க., 199வது வார்டு: சோழிங்கநல்லுார் மார்க்கெட் இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். பயன்பாடு இல்லாத மின்கம்பங்களை அகற்ற வேண்டும்.
முருகேசன், தி.மு.க., 200வது வார்டு: செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளை அலைக்கழிக்கின்றனர். வடிகால், குழாய் பதிப்பு பணிகளால் துண்டான மின் கேபிள்களை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர்.
தொடர்ந்து, 'ஓ.எம்.ஆரில், வணிகம் சார்ந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு, தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அது போன்ற கட்டிடங்கள் மீது, எடுத்த நடவடிக்கை என்ன?' என, தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரம் கேட்டார்.
இதற்கு, சுகாதாரம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், 'பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது' என பதில் கூறினர். 'அடுத்த நடவடிக்கை என்ன' என, கவுன்சிலர் கேட்டபோது, 'சீல்' வைக்கலாம் என்றனர்.
இதற்கு, 'எந்த துறை' என, கேட்டபோது, எந்த அதிகாரியும் பதில் கூறவில்லை. ஒருவரை ஒருவர் கைகாட்டி, பொறுப்பை தட்டி கழித்தனர்.
தொடர்ந்து, ''சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு, சீல் வைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, மண்டல குழு தலைவர் மதியழகன் கூறினார்.
பின், 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.