/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை துண்டிப்பு அனுமதிக்காதீர் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
சாலை துண்டிப்பு அனுமதிக்காதீர் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சாலை துண்டிப்பு அனுமதிக்காதீர் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சாலை துண்டிப்பு அனுமதிக்காதீர் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2024 01:46 AM

அடையாறு, அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி ராஜசேகர் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், 11 கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
வேளச்சேரி, சேவா நகரில் மீண்டும் மகப்பேறு மருத்துவமனை துவங்க வேண்டும். கிண்டி, சிட்கோ பகுதி ஒரு தனித்தீவு போல் உள்ளதால், அங்குள்ள நிர்வாக குளறுபடியால், மக்கள் கூறும் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை.
வேளச்சேரி, ராம் நகர், விஜய நகர் உள்ளிட்ட பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கோட்டூர்புரம் பாலத்தில் மாற்று சாலை அமைக்க வேண்டும்.
சாலையில் உள்ள கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற, போலீசார் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. வார்டுகள் மறுசீரமைப்பு செய்தும் தெருப் பலகைகளில் திருத்தம் செய்யவில்லை.
பருவ மழையில் பல சாலைகள் சேதம் அடைந்தன. அதை, விரைந்து சீரமைக்க வேண்டும். லோக்சபா தேர்தல் அறிவித்த பின், சாலை துண்டிப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
தொடர்ந்து, 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.