/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் பணம் வசூல் திருநங்கையருக்கு 'கவுன்சிலிங்'
/
பயணியரிடம் பணம் வசூல் திருநங்கையருக்கு 'கவுன்சிலிங்'
பயணியரிடம் பணம் வசூல் திருநங்கையருக்கு 'கவுன்சிலிங்'
பயணியரிடம் பணம் வசூல் திருநங்கையருக்கு 'கவுன்சிலிங்'
ADDED : ஜூன் 29, 2025 12:24 AM
சென்னை, 'பயணியரிடம் கட்டாய பணம் வசூலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருங்கைகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ரயில்வே பாதுகாப்பு படை எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், திருநங்கையர் சிலர், பயணியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணியரிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும், ரயில்வேயின் உதவி மையத்திற்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் தலைமையில் திருநங்கையருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, எழும்பூரில் நேற்று நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட திருநங்கையர் பங்கேற்றனர்.
பயணியருக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், திருநங்கையர் செயல்படக்கூடாது. பயணியரிடம் கட்டாயமாக பணம் கேட்பது போன்ற புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டது. மேலும், திருநங்கையருக்கு தற்போதுள்ள வேலைவாய்ப்பு குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.