/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடங்கில் பதுக்கிய போலி பொருட்கள் பறிமுதல்
/
கிடங்கில் பதுக்கிய போலி பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 13, 2025 12:54 AM
திருவொற்றியூர்,
பிரபல தனியார் நிறுவனத்தில் பெயரில், திருவொற்றியூர் கிடங்கில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி பொருட்களை, நிறுவன அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருவொற்றியூர், சாத்தாங்காடு நெடுஞ்சாலை - காந்தி நகர் பகுதியில், முனிவரதன், 55, என்பவருக்கு சொந்தமான கிடங்கில் பிரபல தனியார் நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் லிவர்' பெயரில் போலியான தயாரிப்பு பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற உத்தரவுபடி, நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, திருவொற்றியூர், காந்தி நகர் கிடங்கிற்கு நேற்று மதியம் வந்தது.
கிடங்கின் பூட்டை சுத்தியால் உடைத்து, உள்ளே சென்ற அதிகாரிகள், துணி சலவை பவுடர், மசாலா பொருட்கள், ஷாம்பு உள்ளிட்ட போலி தயாரிப்புகளை பறிமுதல் செய்து, மூன்று 'டாடா ஏஸ்' வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.