/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டுநரை தீர்த்துக்கட்ட முயன்ற கள்ளக்காதலி கைது
/
கார் ஓட்டுநரை தீர்த்துக்கட்ட முயன்ற கள்ளக்காதலி கைது
கார் ஓட்டுநரை தீர்த்துக்கட்ட முயன்ற கள்ளக்காதலி கைது
கார் ஓட்டுநரை தீர்த்துக்கட்ட முயன்ற கள்ளக்காதலி கைது
ADDED : ஜூலை 05, 2025 12:10 AM
துரைப்பாக்கம்,பெருங்குடியில் கார் ஓட்டுநரை கொலை செய்ய முயன்ற, கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 36. இவர், பெருங்குடியில் தங்கி 'கால் டாக்சி' கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி, பிரிந்து வாழ்கிறார்.
கடந்த வாரம், இவரது குழந்தைகளை, சக்திவேலின் பெற்றோர் திண்டிவனம் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சக்திவேலின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் கிடந்தார்.
அவரது உறவினர்கள், அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு வயிற்றில் ஆழமான வெட்டுக் காயத்திற்கும், குடல் பாதிப்பிற்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், சக்திவேல் மதுபோதையில் இருந்த சமயத்தில், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி, 30, அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.
சக்திவேலிற்கும், ஏற்கனவே திருமணமான சுபாஷினிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுபாஷினி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, சக்திவேலை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்; சக்திவேல் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷினி, மதுபோதையில் துாங்கிக் கொண்டிருந்த சக்திவேலை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.
சுபாஷினியை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.