/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது அருந்தி அட்டகாசம் தட்டிக்கேட்ட தம்பதிக்கு அடி
/
மது அருந்தி அட்டகாசம் தட்டிக்கேட்ட தம்பதிக்கு அடி
ADDED : அக் 25, 2025 08:26 AM
கோயம்பேடு: நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம், 47. இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் வசிப்பவர் சண்முகம், 37.
நேற்று முன்தினம் இரவு, சண்முகம், வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி, அட்டகாசம் செய்ததாக தெரிகிறது.
இதை, பொன்னுரங்கம் தட்டி கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சண்முகம், அருகில் கிடந்த இரும்பு கம்பியால், பொன்னுரங்கத்தை தாக்கினார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவியையும், சண்முகம் தாக்கியதாக தெரிகிறது.
காயமடைந்தவர்களை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

