/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
/
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : நவ 01, 2025 01:54 AM
மடிப்பாக்கம்: சென்னையை அடுத்த கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் விஸ்வநாத், 28. இவர், பரங்கிமலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் பணிபுரியும் ஈரோடைச் சேர்ந்த வைஷ்ணவி, 26, என்பவரை, ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
காதல் விவகாரம் வைஷ்ணவியின் வீட்டிற்கு தெரிந்து, பெற்றோர் வேறு நபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வைஷ்ணவி, நேற்று காலை வடபழனி கோவிலில், விஸ்வநாத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
பின், மடிப்பாக்கம் காவல் நிலையம் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதனால், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறினர். போலீசார் அறிவுரை கூறி, காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

