/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஞானசேகரன் குரல் பரிசோதனை கோர்ட் அனுமதி
/
ஞானசேகரன் குரல் பரிசோதனை கோர்ட் அனுமதி
ADDED : பிப் 05, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், டிச.,25ல், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஞானசேகரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.