/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
/
நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 05, 2025 12:09 AM
சென்னை, சென்னை, திருவான்மியூரில் உள்ள 'ஆர்ட்ரியம்' அடுக்குமாடி குடியிருப்பு சங்கம், செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டுப்பாடு விதித்தது. இது சம்பந்தமாக, சில விதிகளையும் வகுத்தது.
அவற்றில் சில:
அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால், அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லையெனில் முதல் முறை 1,000 ரூபாயும், 2வது முறை 2,000 ரூபாயும், 3வது முறை 3,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
செல்லப்பிராணிகள், பொதுவெளியில் சிறுநீர் கழித்தால், 250 முதல் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்தவெளிக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல, மின்துாக்கியை பயன்படுத்தக் கூடாது. மூன்று முறைக்கு மேல் விதிகளை பின்பற்றாத குடியிருப்புவாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே குடியிருப்புவாசியான மனோரமா ஹிதேஷி, 78, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 16வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களால், சங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற அடிப்படையில், சங்கம் அபராதம் விதிக்க முடியாது. செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது, மிரட்டலுக்குச் சமம். அதைத் தவிர்க்க வேண்டும்.
விலங்குகள் நல வாரியத்தின் விதிகள், சட்டப்படி பிறப்பிக்கப்பட்டவை. பிராணிகள் மலம், சிறுநீர் கழித்தால், அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்யாவிட்டால் அபராதம் விதித்து, நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது.
செல்லப்பிராணிகளின் உரிமையாளரிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. கடந்த, 2023 ஜூலை 3ல், 16வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.