/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி நீர்நிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் ஜூன் 12ம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஏப் 15, 2025 12:32 AM
வேளச்சேரி,அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 10 ஏக்கருக்கு மேல் அரசு இடம் உள்ளது. இதில், ஆக்கிரமிப்பில் இருந்த, 3.50 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இடத்தில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 10 அடி ஆழத்தில் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இதில், 1.50 மில்லியன் கன அடி மழைநீர் சேமிக்கப்பட்டது.
இந்த குளங்களில் நிரம்பி வழியும் உபரிநீர், சதுப்பு நிலத்தை அடையும் வகையில், குழாய் மற்றும் வடிகால்வாய் கட்டமைப்பு உள்ளது.
தவிர, குளத்தைச் சுற்றி, 20 கோடி ரூபாயில், 'சமூக சோலை' பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில், நடைபயிற்சி பாதை, மூங்கில் இருக்கைகள், பறவைகள் வந்து செல்ல வசதி, நீரூற்று, வண்ண விளக்குகள் மற்றும் வேளச்சேரி - தரமணி ரயில் நிலையம் இடையே, 3.20 கி.மீ., சைக்கிள் பாதை அமைய உள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது.
வெள்ள பாதிப்பு
இந்நிலையில், ரயில்வே சாலையை ஒட்டி, அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால், அங்குள்ள மழைநீர் வடிகால்வாயில் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு, அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எனவே, வடிகால்வாய் பாதையை சீரமைக்க வேண்டும் என, வேளச்சேரி டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
விசாரித்த நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம், வேளச்சேரி தாசில்தார் இணைந்து, ஜூன் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அளந்து, அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளது.