/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பசு பலி
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பசு பலி
ADDED : அக் 21, 2025 11:52 PM

அரும்பாக்கம்: அரும்பாக்கம் பகுதியில், பாழான வீட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த பசு, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானது.
அரும்பாக்கம், மாங்காளி அம்மன் கோவில் தெருவில், நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில், பசு ஒன்று மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது, அதே தெருவில் யாரும் வசிக்காத பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கிருந்த புற்களை மேய்ந்துக் கொண்டிருந்த போது, திடீரென வலையால் மூடப்பட்டிருந்த, பயன்படுத்தாத தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
சில மணிநேரத்திற்கு பின், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 10 அடி ஆழத்திற்குள் கிடந்த மாட்டை மீட்க முயன்ற போது, மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில், அதேபகுதியில், பிள்ளையாளர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கட், 45 என்பவரின் மாடு என்பது தெரிந்தது.