/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி
ADDED : நவ 22, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருவல்லிக்கேணியில், மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலியானது.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலை சுற்றியுள் ள சாலைகளில், 60க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன. நேற்று காலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பார்த்தசாரதி கோவில் வளை வில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, அருகே இருந்த மின் இணை ப்பு பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலி யானது.
சம்ப வம் அறிந்து வந்த மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவை சரி செய்தனர். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

