ADDED : ஜன 08, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈஞ்சம்பாக்கம்:கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், மேய்ச்சலுக்காக, ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிக்கு, மாடுகளை அனுப்புகின்றன.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டும், துள்ளிக் குதித்தும், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக மாடுகள் உலாவுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
தினமும், ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து, படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ரேடியல் சாலையில் உலா வரும் மாடுகளால் உயிர் பலி ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.