/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரசென்ட் கல்லுாரி பட்டமளிப்பு விழா: 2,991 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
/
கிரசென்ட் கல்லுாரி பட்டமளிப்பு விழா: 2,991 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
கிரசென்ட் கல்லுாரி பட்டமளிப்பு விழா: 2,991 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
கிரசென்ட் கல்லுாரி பட்டமளிப்பு விழா: 2,991 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
ADDED : ஜன 13, 2026 06:57 AM

சென்னை : பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 15வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில், 65 முனைவர் பட்டங்கள், 774 முதுகலை பட்டதாரிகள், 2,152 இளங்கலை பட்டதாரிகள் என, மொத்தம் 2,991 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
உயர்ந்த தர வரிசை களைப் பெற்ற, 63 மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் முதுகலை பட்டதாரிகள், 25 பேரும் அடங்குவர். பட்டமளிப்பு விழாவில், 759 மாணவர்கள் நேரடியாகவும், 2,232 மாணவர்கள் இணைய வழியிலும் பங்கேற்று, பட்டங்களை பெற்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
தலைமை தாங்குவது என்பது அரசியலுக்கு மட்டுமல்ல; தொழில்துறைக்கும் பொருந்தும் என்பதற்காக எடுத்துக்காட்டாக, ஜின்னா ரபிக் அகமது விளங்குகிறார்.
அவரை தொடர்ந்து, அப்துர் ரஹ்மான் அவர்களின் பிள்ளைகள், உயரிய நோக்கமான கல்வி, முக்கியமாக பெண் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை, உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
பெண் விடுதலைக்கு பாடுபட்ட, அனைத்து தலைவர்களும் பெருமைப்படும் வகையில், கிரசன்ட், அவர்களின் கனவை நிஜமாக்கி வருகிறது. இன்று பட்டதாரிகளாக நிற்கும் மாணவர்கள், இன்று முதல் பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் அடையாளங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன செயல் தலைவர் ஜின்னா ரபிக் அகமது, பி.எஸ்.ஏ.சி.ஐ.எஸ்.டி.,யின் வேந்தர் குர்ரத் ஜமீலா, இணை வேந்தர் அப்துல் காதிர் ரகுமான் புகாரி, பொறுப்பு துணை வேந்தர் பீர் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

