/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட்: ஒய்.எம்., - சி.சி., அணி வெற்றி
/
கிரிக்கெட்: ஒய்.எம்., - சி.சி., அணி வெற்றி
ADDED : அக் 24, 2025 01:46 AM

சென்னை: டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், ஒய்.எம்., சி.சி., அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐ.ஏ.எப்., தாம்பரம் அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.
ஆவடியில் உள்ள மேக்னா கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், ஒய்.எம்., கிரிக்கெட் கிளப் அணி, ஐ.ஏ.எப்., தாம்பரம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில், டாஸ் வென்ற ஐ.ஏ.எப்., தாம்பரம் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால், ஒய்.எம்., சி.சி., அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 37.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
நவீன் சிங் 57 ரன்கள் அடித்து, ஆறுதல் அளித்தார். ஒய்.எம்., சி.சி., அணி வீரர் செல்வகுமார், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஒய்.எம்., சி.சி., அணியின் விக்கெட்டும் அடுத்தடுத்து விழுந்ததால் தடுமாறினர்.
பின் தடுப்பாட்டம் ஆடி 25.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்தது. இதனால், ஐ.ஏ.எப்., தாம்பரம் அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆறாவது டிவிஷனுக்கான போட்டியில், அண்ணா பல்கலை அணி, அசோக் லேலண்ட் அணியை எதிர்த்து மோதியது. டாஸ் வென்ற அண்ணா பல்கலை அணி 29.3 ஓவர்களில் 159 ரன் எடுத்தது. ஜெகதீசன் 61, விக்ரம் 30 ரன் அடித்து அணிக்கு ஆறுதல் தந்தனர்.
அடுத்து களமிறங்கிய அசோக் லேலண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. பாலு ராஜ் குமார் 57, கோபால் 47 ரன் அடித்தனர்.
இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் அண்ணா பல்கலை அணி த்ரில் வெற்றி பெற்றது.

