UPDATED : மே 30, 2026 05:43 PM
ADDED : மே 30, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
சாஸ்திரிநகர்: பெசன்ட் நகர், 26வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுகேர்குமார், 28; டாக்டர். பணி முடித்து, கடந்த 27ம் தேதி இரவு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் இருந்த ஐபோன் மொபைல் போன், விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் திருடுபோயின. சாஸ்திரி நகர் போலீசார் விசாரணையில், பெசன்ட் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன், 20, என்பது தெரிந்தது. நேற்று, இவரை கைது செய்த போலீசார், பொருட்களை பறிமுதல் செய்தனர்.
