UPDATED : மே 01, 2026 05:55 PM
ADDED : மே 01, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
பெண்ணுக்கு தொந்தரவு: வாலிபர் கைது
அண்ணா நகர்: அண்ணா நகர் பகுதியில் கணவருடன் வசிக்கும் 25 வயது பெண், கடந்த 29ம் தேதி இரவு, எட்டாவது பிரதான சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஏ.ஹெச்., சந்திப்பு அருகே, காரில் வந்த நபர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி தவறான முறையில் அணுகியுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, அந்நபர் அங்கிருந்து தப்பினார்.
போலீசார், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், 29, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், புகைப்படக் கலைஞராக பணியாற்றும் அவர், பெண்ணிடம் தவறான முறையில் நடந்தது உறுதியானது. அவரை நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் சிறையில் அடைத்தனர்.
