UPDATED : மே 01, 2026 05:56 PM
ADDED : மே 01, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
வழக்கு வாகனங்கள் தீயில் நாசம்
பூக்கடை: குற்ற வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், பூங்கா நகர், ரத்தன் பஜார் சாலையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 6:30 மணிக்கு, வளாகத்தில் குவிந்திருந்த குப்பையில் திடீரென தீ பற்றியதால், அங்கிருந்த வாகனங்களும் எரிந்தன.
எஸ்பிளனேடு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் மூன்று ஆட்டோக்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
