தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


UPDATED : ஜூன் 27, 2026 10:16 PM

ADDED : ஜூன் 27, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 10:16 PM ADDED : ஜூன் 27, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா சாலை: ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி தமிழ்செல்வன், 43, திருவல்லிக்கேணி சீனிவாசன், 28, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். இரு மொபைல் போன்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

முதியவர் துாக்கிட்டு தற்கொலை

புளியந்தோப்பு: ஓட்டேரி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 67. சிறுநீரக பிரச்னைக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவந்த இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓட்டேரி போலீசார், நேற்று காலை சந்திரனின் உடலை மீட்டனர்.

**

மனைவியை தாக்கிய கணவர் கைது

பெரவள்ளூர்: பெரவள்ளூர், ராம் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 35, என்பவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி கேட்கவே, அவரை தாக்கியுள்ளார்.

அவரது மனைவி, திரு.வி.க., நகர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, கணவர் கார்த்திக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us