ADDED : டிச 16, 2025 04:55 AM
அ நிறம் | அளவு
புழல்: புழல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, படிப்பை பாதியில் நிறுத்தி, பெற்றோருடன் வீட்டில் வசிக்கிறார். அவரது தாய், உறவினர் வீட்டுக்கு சென்றபோது அங்குள்ள உறவினரான 15 வயது சிறுவன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். தாயின் புகாரையுடுத்து, புழல் மகளிர் போலீசார், சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
-
போதை வாலிபருக்கு 'காப்பு'
ஓட்டேரி: ஓட்டேரி மங்களாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று காலை பேருந்திற்காக பயணியர் காத்திருந்தனர். அங்கு மது போதையில் வந்த விக்னேஷ், 25, என்ற வாலிபர், பயணியரிடம் தகராறு செய்துள்ளார். ஓட்டேரி போலீசார், அவரை கைது செய்தனர்.
