sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர் சென்னை

/

 கிரைம் கார்னர் சென்னை

 கிரைம் கார்னர் சென்னை

 கிரைம் கார்னர் சென்னை


UPDATED : ஜன 14, 2026 05:15 AM

ADDED : ஜன 14, 2026 05:06 AM

Google News

UPDATED : ஜன 14, 2026 05:15 AM ADDED : ஜன 14, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைனான்சியர் வீட்டில் 10 சவரன் நகை, ரூ.12 லட்சம் திருட்டு



வானகரம்: வானகரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் இளவரசன், 32; பைனான்சியர். குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்ற இவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 12 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவரது புகாரை, வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது


கண்ணகி நகர்: எழில் நகரைச் சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான அலெக்ஸ், 35, குடும்பத்துடன் வெளியூர் சென்று, 11ம் தேதி வீடு திரும்பினார். பீரோவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 24, என்பவர், அலெக்ஸ் வீட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்திய திரிபுரா நபர் கைது


சென்னை: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில், எழும்பூரில் நடைமேடை எட்டில், நேற்று முன்தினம் இரவு வந்தது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அல் அமீன், 23, என்ற பயணியின் உடைமையில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய 18 கிலோ கஞ்சா இருந்தது.

ஹவுராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

கூவத்தில் குதித்த மாணவி மாயம்

சென்னை: அண்ணா சதுக்கம், நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று மதியம் 12:00 மணியளவில் இளம்பெண் ஒருவர், திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த மாணவியின் பை மற்றும் அவர் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், பெருங்களத்துாரைச் சேர்ந்த சென்னை பல்கலை எம்.பி.ஏ., மாணவி யுவஸ்ரீ, 25, என்பது தெரியவந்தது.

ஆண் சடலம் ஏரியில் மீட்பு


மாதவரம்: மாதவரம் அருகே, மாத்துார் ஏரியில், தமிழக சுற்றுலாத் துறை மூலம் சுற்றுலா படகு சவாரி, நேற்று மாலை துவங்கியது. முன்னதாக, காலையில், ஏரியில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுவனிடம் அத்துமீறிய டியூஷன் மாஸ்டர் கைது


திருவொற்றியூர்: பீஹாரைச் சேர்ந்தவர் ரஹமதுல்லா, 25; டியூஷன் மாஸ்டர். இவர், திருவொற்றியூரில் தங்கி, சிறுவர்களின் வீடுகளுக்கு சென்று, பாடம் கற்று கொடுக்கிறார். இரு தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனின் வீட்டிற்கு சென்று, சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் ரஹமதுல்லாவை, நேற்றிரவு கைது செய்தனர்.

கடலில் குளித்த மாணவன் மாயம்


காசிமேடு: கொடுங்கையூர், ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 32. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, மூன்று பிள்ளைகளுடன் வசிக்கிறார்.

இவரது மகன் வினோத், 15, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். இவர், நேற்று மாலை, தன் நண்பர்களான சக்திவேல், நவீன்குமார், சாமுவேல் ஆகியோருடன் காசிமேடு கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் நால்வரும் சிக்கினர். இதில், சக்திவேல், நவீன்குமார், சாமுவேல் உயிர் தப்பிய நிலையில், வினோத் அலையில் இழுத்து செல்லப்பட்டார். போலீசார் மற்றும் மீனவர்கள் அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us