sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர்: சென்னை

/

 கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை


ADDED : பிப் 04, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது

அயனாவரம்: அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டு மைதானத்தில், கடந்த மாதம் 29ம் தேதி, போதை பொருள் தடுப்பு போலீசார் கண்காணித்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இப்ராஹிம், 26, அக்பர் அலி, 36, பாபுஜி, 36, சாகுல் ஹமீது, 26, நோயல் அலி, 36 உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 37 கிராம் மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் அளித்த தகவலின்படி, வில்லிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை மூவருக்கு காப்பு

ஓட்டேரி: ஓட்டேரி, எஸ்.வி.எம்., நகர் குப்பை சேகரிப்பு வளாகம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் மாலை, குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போலீசார், கஞ்சாவுடன் இருந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் புரசைவாக்கம், எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த 'ஓட்டேரி' பரத், 34 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், புழல் மற்றும் காவாங்கரை பகுதியில் கஞ்சா விற்ற வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ்குமார், 30, சோழவரத்தை சேர்ந்த சரவணன், 31, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us