sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிரைம் கார்னர்: சென்னை

/

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : பிப் 04, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'

சைதாப்பேட்டை:: பிறந்த நாள் கொண்டாட்ட வீட்டில், சிறுமியிடம் சில்மிஷம் செய்த, பந்தல் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், பந்தல் நிறுவன ஊழியர் சக்திவேல், 31, பந்தலை பிரித்து கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று, சில்மிஷம் செய்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது கொண்டே சென்று, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியது.

சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, சைதாப்பேட்டை மகளிர் போலீசார், சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் ஊராட்சி சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 36; ஓட்டுநர்.

இவர் கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்றார். நேற்று காலை வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 5,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us