தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர் : சென்னை

 கிரைம் கார்னர் : சென்னை

 கிரைம் கார்னர் : சென்னை


ADDED : மே 30, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன், 26 வயது ஐ.டி., பெண் ஊழியர் அதிகாலையில் நடந்து சென்றார். அப்போது, 'ஹெல்மெட்' அணிந்து பைக்கில் வந்த நபர், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு, 40, என்பதும், தனியார் வாகன சேவை நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



காயங்களுடன் ஆண் உடல் மீட்பு

பனையூர்: சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் அருகே காலி நிலத்தில், உடல் முழுதும் ரத்த காயங்களுடன், 40 வயது ஆண் உடலை போலீசார் மீட்டனர். அவர், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் திருடிய இருவருக்கு 'காப்பு'

திருமங்கலம்: திருமங்கலம், ஜெகதாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் வாசு 50; பால் வியாபாரி. கடந்த 25ம் தேதி இவரது வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது. விசாரித்த திருமங்கலம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அமைந்தகரையைச் சேர்ந்த கோகுல், 21, பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள், அபிராமபுரம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் மொபைல் போன் பறித்ததும் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us