ADDED : ஜூன் 15, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி
எண்ணுார்: பீஹாரைச் சேர்ந்தவர் தேவநாத்குமார், 38; எண்ணுார், அன்னை சிவகாமி நகரில் தங்கி, தனியார் மாத்திரை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை, பீஹாரைச் சேர்ந்த கஞ்சன் போர்ஸ் என்பவருடன், எர்ணாவூர் -- பாரதியார் நகர் கடற்கரைக்கு குளிக்க சென்றார்.
இருவரும் குளித்து கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி தத்தளித்தனர். இருவரையும் மீட்ட மீனவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தேவநாத்குமாரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். கஞ்சன் போர்ஸ் சிகிச்சை பெற்று வருகிறார். எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
