தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


ADDED : ஜூன் 19, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து பலி

பல்லாவரம்: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சேகர், 50; கட்டட பணிகளுக்கான 'எலக்ட்ரிக்கல்' ஒப்பந்ததாரர். பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டு வந்தார். அப்பகுதியில் ஒரு ஹோட்டலில், காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.



மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

திருவேற்காடு: மதுரவாயல், பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 44; பெயின்டர். நேற்று முன்தினம் மாலை, அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பெயின்ட் அடித்து கொண்டிருந்தார்.

'வாட்டர் கன்' இயந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது, எதிர்பாராத விதமாக, இயந்திரத்தில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

ஆம்னி பஸ் விபத்து; முதியவர் பலி

அச்சிறுபாக்கம்: கரூரில் நேற்று முன்தினம் 36 பயணியருடன் புறப்பட்ட 'இன்டர்சிட்டி' நிறுவன ஆம்னி பேருந்து, நேற்று அதிகாலை, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அரப்பேடு பகுதியில், முன்னால் சென்ற 'போர்வெல்' டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்த கரூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து, 62, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த 18க்கும் மேற்பட்டோர், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

-'போக்சோ'வில் முதியவர் கைது

செங்குன்றம்: செங்குன்றம் பகுதியில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை, மாரி, 54, என்ற தொழிலாளி, பொம்மை வாங்கித் தருவதாகக் கூறி அத்துமீறியுள்ளார். சிறுமியின் தாய் புகாரையடுத்து, செங்குன்றம் போலீசார், பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் மாரியை நேற்று கைது செய்தனர்.

தங்கையின் காதலனுக்கு வெட்டு

புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம், 23; கல்லுாரி மாணவர். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த அஜய், 20, நேற்று அதிகாலை தனியாக அழைத்து பேசியுள்ளார். தன் தங்கையுடனான காதலை கைவிட கூறியுள்ளார். இந்த தகராறில், பிரேமை கத்தியால் வெட்டினார். புளியந்தோப்பு போலீசார், அஜயை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us