தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை


ADDED : ஜூன் 25, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி



பூந்தமல்லி: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர்களான தமிழ்செல்வன், 32, அருண்குமார், 27, சரவணகுமார், 25, உள்ளிட்ட ஐந்து பேர், ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் காரை நிறுத்தி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவ்வழியே வந்த கார் மோதி தமிழ்செல்வன் பலியானார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த அருண்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி

படப்பை: தாம்பரத்தைச் சேர்ந்த செல்லப்பன், 64, படப்பை பகுதியில் நேற்று முன்தினம், கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் வேலை செய்தபோது, திடீர் மயக்கம் ஏற்பட்டு தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.

லாரி மோதி சமையலர் இறப்பு

படப்பை: திருவண்ணாமலை மாவட்டம், அரசன்குப்பத்தைச் சேர்ந்த சமையலர் புருஷோத்தமன், 32, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், வண்டலுார் நோக்கி, நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. காயமடைந்த அவரை படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. தாம்பரம் போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரான கார்த்திக், 26, என்பவரை கைது செய்தனர்.

கஞ்சா வியாபாரி 60வது முறை கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில், வேலழகி, 68, என்பவர் கஞ்சா மற்றும் மது பாட்டில்களை விற்று வந்தார். பேசின்பாலம் போலீசார் அவற்றை பறி முதல் செய்து, வேலழகியை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 59 வழக்குகள் உள்ள நிலையில், 60வது முறையாக கைதாகியுள்ளார்.

கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற ராதா, 35, அருண், 23, அரவிந்த், 25, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். 2 கிலோ கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

19 சவரன் தங்க நகைகள் மாயம்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், ஆர்.வி.நகரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குநராக உள்ள சுந்தரி, 46, வீட்டில் 19 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி உள்ளது. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தாலி செயினை பறித்தவர் சிக்கினார்

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானுாரைச் சேர்ந்த சந்திரிகா, 56, இம்மாதம் 12ம் தேதி இரவு, வீட்டருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன், 35, என்பவர், சந்திரிகாவின் கழுத்தில் இருந்த 7.50 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

போன் பறிப்பு; 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா, 24, என்ற இளம்பெண், துரைப்பாக்கம்- - பல்லாவரம் ரேடியல் சாலையில், இரு நாட்களுக்கு முன் நடந்து சென்றார். 'டியோ' ஸ்கூட்டரில் வந்த இரு சிறுவர்கள், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

பள்ளிக்கரணை போலீசார், மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us