தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை


ADDED : ஜூலை 02, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கண்ணகி நகர்: கண்ணகி நகரைச் சேர்ந்த வீரகுமார், 32, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்களை வைத்து கஞ்சா, போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளார். இதையறிந்த கண்ணகி நகர் போலீசார், வீரகுமாரை நேற்று கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

ஏ.டி.எம்., பணம் கையாடல்?

கே.கே., நகர்: கே.கே., நகர், முனிசாமி சாலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்ப, 'கிளியர் செக்யூர்டு சர்வீஸ்' என்ற நிறுவனத்தின் ஊழியர்கள், ஜூன் 20ல் சென்றனர்.

அடுத்த நாள் ஏ.டி.எம்., இயந்திரத்தில் வைக்கப்பட்ட பணத்தை சரிபார்த்தபோது 1.76 லட்சம் ரூபாய் குறைவாக இருந்துள்ளது.

பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட பாரதி, 29, தலைமறைவாக இருப்பதால் அவர் மீது, நிறுவன மேலாளர் பிரகாஷ், 52, போலீசில் புகார் அளித்துள்ளார்.

நகை பறித்த வாலிபர் கைது

அண்ணா நகர்: அண்ணா நகரைச் சேர்ந்த மலர்விழி, 40, பத்தாம் வகுப்பு பயிலும் அவரது மகளுடன், கடந்த 24ல், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். கெனால் சாலையில், பின்னால் வந்த நபர், அந்த மாணவியின் 1.5 சவரன் செயினை பறித்து சென்றார்.

போலீசார் விசாரித்து புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன், 24, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்; தங்கச் செயினை மீட்டனர். சரவணன் ஒரு துணிக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்தது தெரிந்தது.

வீட்டில் புகையிலை தயாரித்தவர் கைது

ஷெனாய் நகர்: வீட்டில் புகையில் பொருட்கள் தயாரித்து விற்றதாக, ஷெனாய் நகரைச் சேர்ந்த தர்மராஜ், 50, என்பவரை, அண்ணா நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 73.2 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள், இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

மேன்ஹோலில் விழுந்த தம்பதி

பம்மல்: தாம்பரம் அடுத்த பம்மல், விவேகானந்தர் தெரு வழியாக, நேற்று முன்தினம் பைக்கில் சென்ற தம்பதி, உடைந்திருந்த மேன்ஹோல் எனும் பாதாள சாக்கடை மூடி பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர்.



கைதி வீட்டில் நகை, பணம் திருட்டு

மாங்காடு: மாங்காடு: மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஜானேஸ்வரன், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜானேஸ்வரனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பார்க்க, தாய் தீபா நேற்று சென்ற நிலையில், அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 7 லட்சம் ரூபாய், 5 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us