தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


ADDED : ஆக 01, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெட்ரோ பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி பெரம்பூர்: பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா தியேட்டர் அருகே, மெட்ரோ ரயில் திட்டப்பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்த, டயர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த உமாகாந்த் கோகாயத், 43, என்பவர், மெட்ரோ பணிக்காக தோண்டிய பள்ளத்தில், நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

4வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி எண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 44வது பிளாக்கை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ், 41, நேற்று முன்தினம் மது போதையில், நான்காவது மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்தார். தடுமாறி விழுந்ததில், தலையில் காயமடைந்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கும் முன் இறந்தார்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி பெரம்பூர்: பெரம்பூர், மாணிக்க விநாயகர் கோவில் தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து, 45, உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். குழிக்குள் முத்து இறங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மொபைல் பறித்து, பைக் திருடிய மூவர் கைது பள்ளிக்கரணை: வேளச்சேரி பிரதான சாலை, நாராயணபுரத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடை அருகே, ஆட்டோவில் நின்றிருந்த சுரேஷ், 25, என்பவரை தாக்கி, அவரது மொபைல் போனையும், அங்கிருந்த 'யுனிகார்ன்' பைக்கையும் மூவர் திருடி தப்பினர். பள்ளிக்கரணையைச் சேர்ந்த, யுவராஜ், 28, கார்த்திக், 21, பாலாஜி, 21, ஆகிய மூவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

பேருந்தில் பெண்ணை சீண்டியவர் கைது புதுவண்ணாரப்பேட்டை: திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடி நோக்கிச் சென்ற தடம் எண் '6டி' மாநகர பேருந்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயது ஐ.டி., பெண் ஊழியர் பயணித்தார். பின் இருக்கையில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த பிரவீன்குமார், 44, அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய, ஜெயசூர்யா, 66, என்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

லாரி திருட முயற்சி: ஒருவர் கைது பம்மல்: பம்மல், காமராஜபுரத்தில் உள்ள லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தியிருந்த ராஜேந்திரன் என்பவரின் லாரியை கள்ளச்சாவியால் இயக்கி, பின்னோக்கி எடுத்து செல்ல முயன்ற மர்ம நபர், மின் கம்பத்தில் மோதினார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து சங்கர் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த முருகேசன், 50, என்பது தெரிந்து, போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us