UPDATED : அக் 07, 2026 07:33 PM
ADDED : அக் 07, 2026 07:16 PM
கல்லுாரியில் காப்பர் கம்பி திருடிய மூவர் கைது
செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் ‘ஏசி’ உள்ளிட்ட மின்சாதன பொருட்களில் இருந்து காப்பர் ஒயர்களை, சில நாட்களுக்கு முன் திருடிய செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரிஷி, 22, அஜய், 24, அஜித், 22, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீஸ்காரர் வீட்டில் திருடிய மூவர் கைது
செங்குன்றம்: செங்குன்றம், கோமதி அம்மன் நகரில் வசிப்பவர் செல்வகுமார், 40; மீஞ்சூர் காவல் நிலையத்தின் ஏட்டு. இவரது வீட்டில், செப்., 23ல் புகுந்து 19 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி மற்றும் மூன்று லட்சம் ரூபாய் திருடிய காவாங்கரையைச் சேர்ந்த சதீஷ், 37, மதுரை, திருமங்கலம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கேதீஸ்வரன், 27, அரவிந்த், 27, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
ஆட்டோவை எரித்த இருவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி, 50, தன் ஆட்டோவை கவுதமபுரம் மாநகராட்சி கழிப்பறை அருகே, கடந்த 4ல் நிறுத்தியிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ‘கறி குழம்பு’ தேவகுமார், 20, பார்த்தசாரதியின் மகனுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆட்டோவை தீயிட்டு கொளுத்தினார். போலீசார், தேவகுமாரை கைது செய்தனர்; மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற இரு மெக்கானிக்குகள் கைது
கண்ணகி நகர்: துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 25, விக்னேஷ், 25, பிரேம், 24, ஆகியோர் மெக்கானிக். அங்குள்ள மயானத்தில் கஞ்சா விற்றதை அறிந்து, போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்; 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சினிமா புகைப்பட கலைஞர் தற்கொலை
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு, மங்களபுரம், 12வது தெருவைச் சேர்ந்தவர் வினோத், 40; புகைப்பட கலைஞர். திரைப்படம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி இருந்தார். திருமணமாகாத இவர், தாயுடன் வசித்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு வினோத் தற்கொலை செய்தார்.
கோவிலில் மது பாட்டில் உடைப்பு
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் கிராமத்தில் பிடாரி பள்ளியத்தம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் மது அருந்திய ‘குடி’மகன்கள், பாட்டில் அங்கேயே உடைத்து சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலை திறந்த பூசாரியின் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயத்தை ஏற்படுத்தியது. கோவிலில் அமர்ந்து மது அருந்துவோர் குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
