தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 08, 2026 09:43 PM

ADDED : அக் 08, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:43 PM ADDED : அக் 08, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலில் தத்தளித்த மாணவன் மீட்பு

மெரினா: வடபழநி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், 26, அவரது இரு நண்பர்கள், மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு குளித்தனர். அப்போது அலையில் சிக்கிய ஸ்டீபனை, கடலோர காவல் படை வீரர்கள் மீட்டனர். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

தொலைபேசி கேபிள் திருட முயற்சி

தி.நகர்: தி.நகரில் உள்ள பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டியை நேற்று உடைத்து, செம்புக் கம்பிகளைத் திருட முயன்ற விழுப்புரம் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த பேரரசன், 20, என்பவரை, போலீசார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளி இருவரை தேடி வருகின்றனர்.

குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

சென்னை: மண்ணடி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். டீக்கடைகளில் வேலையில் செய்து வந்த, 15 வயது சிறுவர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வேலை தருவதாக பெண்ணுக்கு தொல்லை

திருவான்மியூர்: திருவான்மியூர், குப்பம் கடற்கரை பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி, பாலியல் தொல்லை அளித்த, கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜேஷ், 43, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

வழிப்பறி: சிறுவன் உட்பட நால்வர் கைது

ஆர்.கே.நகர்: தண்டையார்பேட்டை, பரமேஸ்வரன் நகரைச் சேர்ந்த, கல்லுாரி மாணவர் அஜய், 19, ஆர்.கே.நகர் ஐ.ஓ.சி., பேருந்து நிலையம் அருகே கடந்த 4ல் சென்றார். அவரது மொபைல் போனை பறித்து தப்பிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கருப்புசாமி, 21, தினேஷ், 29, சுபாஷ், 26, மற்றும் 16 வயது சிறுவன் உட்பட நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த, உணவு டெலிவரி ஊழியர் அஷோத், 30, என்பவரை அரும்பாக்கத்தில் மிரட்டி மொபைல் போன் பறித்த கார்த்திகேயன், 19, தீபக், 20, ஆகியோர் கைதாகினர்.

போதை மாத்திரை விற்ற இருவர் கைது

வியாசர்பாடி: எருக்கச்சேரியைச் சேர்ந்த தென்னரசு, 22, அவரது நண்பர் நிதீஷ், 19, ஆகியோர், பெங்களூரில் இருந்து ‘டைடால்’ எனும் போதை மாத்திரைகளை வாங்கி, இப்பகுதிகளில் விற்றுவந்தது தெரிந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பெயிண்டரை கத்தியால் தாக்கிய இருவர் கைது

வேப்பேரி: ஓட்டேரி, டோபிகானா குடிசை பகுதியைச் சேர்ந்த பெயின்டர் தம்பா, 40, சூளை ராகவேந்திரா பூங்கா அருகே, நேற்று முன்தினம் மதியம் நடந்து சென்றார். அவரை வழிமறித்து தாக்கிய சூர்யா, 23, அவரது அண்ணன் அஜித், 28, ஆகியோரை, வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிறுவனிடம் செயின் பறித்த திருடன் கைது

புழல்: புழல், கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அணிந்திருந்த 1.5 சவரன் தங்க நகையை பறித்து தப்பிய, அதே பகுதி கதிர்வேல் என்பவரை, 39, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us